தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கொசுக்கள் மூலமாக பரவும் நோய்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகரித்திருப்பதாகவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் நிகழாண்டில்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் உயிரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனே அது குறித்த விவரங்களை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கேரளத்தை ஒட்டிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டை மற்றும் டயர்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் தொட்டிகளை மூடி வைத்தல் அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.