தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அரசு பள்ளிகளில் உள்ள நான்கு முக்கிய பாடப்பிரிவுகளை ரத்து செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அரசு பள்ளிகளில் உள்ள வேளாண் அறிவியல், துணி நூல் தொழில்நுட்பம், அடிப்படை மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட இருப்பதாகவும், இந்தப் பிரிவில் சேர ஏற்கனவே விண்ணப்பத்திற்கும் மாணவர்களை வேறு பாடத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவது குறித்தான எந்தவித அலுவலக ரீதியான உத்தரவும் தற்போது வரை வெளியாகவில்லை.