இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்  கூகுள் பே ஆப்பை பயன்படுத்தி யாரும் பில் கட்டவேண்டாம் என ரேசரும், தமிழ்நாடு பாஜக உறுப்பினருமான அலிஷா அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்த தனது ட்வீட்டில், ‘கூகுள் பே மூலம் அதிகமாக வணிக மின் கட்டணம் கட்டி ஏமாந்துவிட்டேன். கடந்த மாத கட்டணம் ரூ.22,000 ஆனால் கூகுள் பே மூலம் நான் ரூ.49,000க்கு பில் வந்தது. எனவே மக்கள் கவனமாக இருக்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.