
3 நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது “சுய மரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் இணைந்து திராவிடர் கழகம் உருவாகியது சேலத்தில் தான்.
அதோடு அண்ணாதுரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் சேலம் மண்ணில் தான். இதனிடையே தமிழ்நாடு வரும் அமித்ஷா 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்ற பட்டியலை வெளியிட தயாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.