தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் விரைவில் தளபதி விஜய் உலகம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டி இடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நூலக திட்டம் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.