
தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐ.க்கள் 120 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனைப் போலவே இன்ஸ்பெக்டர்கள் ஏழு பேரையும் பணியிட மாற்றம் செய்துள்ளார். நாளையுடன் ஓய்வு பெற உள்ள டிஜேபி சைலேந்திரபாபு நேற்று நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது, 2008 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 120 எஸ்ஐக்கல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.