தமிழகத்தில் மே 26 ஞாயிற்றுக்கிழமை நியாயவிலை கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மே மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும்.

இதனை கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளுக்கும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.