சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வியை தொடர ஊக்கத்தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயம் தமிழகத்தில் குழந்தைகள் நலனை காப்பதற்காக தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டது மட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளில் 7,343 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.