தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் மே 26 நாளை பணி நாளாக இருக்கும் என்பதால் இதற்கு ஈடாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.