
தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் இதனை கருதி விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளை ஜூன் 19ஆம் தேதி திறக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனர் கீதா தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.