
தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வாகன சோதனையும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் முகத்தை அடையாளம் காட்டக்கூடிய மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ டி எம் மையங்களிலும் நிறுவப்பட வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.ஏடிஎம் இயந்திரங்களில் எச்சரிக்கை மணி சம்பவ இடத்திலும் அந்தந்த பகுதி காவல் நிலையத்திலும் ஒழிக்கும் விதமாக பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்