நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதனை மின் பயனர்கள் ஆன்லைன் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக ஜனவரி 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு  நாட் மட்டுமே உள்ள நிலையில் மின் இணைப்பு என்னுடன் ஆதாரை இணைக்காமல் உள்ள மின் நுகர்வோர்கள் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.