
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதன்படி 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில் அரசு தேர்வு துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது. இதனை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம். இதேபோன்று தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.