தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 2 புதிய whatsapp குழுக்களை உருவாக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழுவில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் இணைக்கப்பட்ட பிறகு கற்றல் சார்ந்த விவரங்கள் whatsapp மூலமாக பகிரப்படும். இதன் மூலம் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் மேம்படுத்தப்படும்.

இதில் ஆர்வம் இல்லாத ஆசிரியர்களையும் ‌ ஊக்கப்படுத்தி அதில் இணைய வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறக அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கற்றல் திறனை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்படி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதுடன் கல்வியின் தரமும் உயர்ந்து வருகிறது.