தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அமலில் உள்ள நிலையில் அடுத்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டில் 31008 அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த திட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.