தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை திருமணம் இல்லாத தமிழகம் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது பள்ளிகளில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க சமூக நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான உறுதிமொழிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான பள்ளிகளிலும் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.