தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்.

மேலும் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும்.