தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட 8 முக்கிய நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் நடைமுறை உள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படவுள்ளன.

இந்நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு முறைகள் வலுவடைக்கப்படுகின்றன. இதன்மூலம் கள்ளச்சந்தை விற்பனையும் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அவ்வாறாக, வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினமாக இருப்பதால், அனைத்து டாஸ்மாக் கடைகளும் அந்த நாளில் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.