தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்குள் அரசு தொடக்கப் பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 700 கோடி ரூபாய் செலவில் 25 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 7,904 கணினி ஆய்வகங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.