தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும். அதே நேரத்தில் இந்த மாதம் பதிவாகும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்து கோடை விடுமுறையை நீடிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மே 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் அதேபோல் வழங்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் உள்ளிட்டவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவினை விடுமுறைக்கு முன்பாகவே வீட்டிற்கு எடுத்துச் சென்று பயனாளிகள் பயன்பெறும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.