தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று மற்றும் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல், ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கிடைக்கும். இந்த படிவங்களை பூர்த்தி செய்து அங்கேயே ‌ சமர்ப்பிக்கலாம். மேலும்  இன்று 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.