தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி போன்ற ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள், சீருடைகள் அனைத்துமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

இந்த நிலையில் இலவசமாகவே மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெள்ளத்தால் மொத்த உடைமைகளையும் இழந்த மாணவ மாணவிகளுக்கு கூடுதலாக இரண்டு செட் பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.