நேரத்திற்கேற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மின் கட்டணம் குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமில்லை என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஸ்மார்ட் மீட்டர் அவசியம், தமிழகத்தில் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தும் பணி தற்போது தான் தொடங்கியுள்ளதால் இத்திட்டம் அமலாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

மேலும் இத்திட்டம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழக மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அப்படியானால் வணிகமயமான மின் தேவைகளுக்கு இது பொருந்தும் என்று அர்த்தம் ஆகிறது. காலை மற்றும் மாலை அதிக மின் பயன்பாடு இருக்கும் நேரங்களில் 20% கட்டணமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வசூலிக்கப்பட இருக்கிறது.