தமிழகத்தில் ஒன்பது ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு ஆர் ஓ எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தெற்கு ரயில்வே அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே தற்போது திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

விருப்பமுள்ள பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள்,பெரிய நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கலாம். இதற்கான நீர் மற்றும் மின்சார வசதியை ரயில்வே வழங்கும் எனவும் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.