சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மதுரை, தென்காசி, அம்பை வழியாக தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் 5 மாதங்களில் ரூ. 2.14 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளை வைத்து சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது 5 மாதங்களில் தெற்கு ரயில்வேக்கு 2.14 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக் கிழமையிலும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள் கிழமை தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்த சிறப்பு ரயில்கள் தென்காசி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் நல்ல லாபமும் கிடைத்துள்ளது. இதன் காரணமாக வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நிரந்தர ரயில் சேவையாக மாற்ற வேண்டும் என தற்போது பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலரான பாண்டியராஜா என்பவர் எழுப்பிய கேள்விக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் வருமானம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.