தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 78,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023இல் 83,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2040இல் இது 20 லட்சமாக அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் புற்றுநோயின் தாக்கத்தில் கேரளா முதல் இடத்தில உள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை காட்டிலும் இந்திய பெண்கள் இளம் வயதில் பாதிக்கப்படுவதாகவும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான சராசரி வயது 39 ஆக குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.