
உலகில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் மின்னணு இயந்திரங்கள், உப பொருள்கள்,உள்கட்டமைப்பு திட்டங்கள் பலதரப்பட்ட மின்னணு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே தமிழக முழுவதும் உள்ள 77 எல்காட் ஐ டி பூங்காக்களில் காலியாக உள்ள இடங்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஐடி பூங்காக்களில் காலி இடங்களை சந்தைப்படுத்த ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏழு பூங்காக்களில் மொத்தம் 1,359 ஏக்கரில் 374 ஏக்கர் இடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.