
தமிழகத்தில் ஆவின் ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆவி நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆவி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் 44 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால் பாக்கெட் விலை 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் வணிக நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு ஐந்து லிட்டர் பாலின் விலை தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.