2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிர கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னை, எல் முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த ஐந்து தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.