தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.82 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக 97.98 சதவீதத்துடன் ஈரோடு இரண்டாம் இடத்திலும், திருப்பூர் 97.53 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், கோயம்புத்தூர் 97.48 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும், கன்னியாகுமரி 97.1% ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் சிறைகைதிகளில் 140 பேர் தேர்வு எழுதிய நிலையில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 16904 தனித் தேர்வர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் 5500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தனித்தேர்வர்கள் தேர்வில் அதிக அளவில் தூவிஅடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி 90.78% தேர்ச்சியுடன் 38 வது இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96 சதவீதம் தேர்ச்சியுடன் 37 வது இடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் 91.49 சதவீத தேர்ச்சியுடன் 36-வது இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டம் 92.55 சதவீத தேர்ச்சியுடன் 35 வது இடத்தையும், ராணிப்பேட்டை மாவட்டம் 92.78 சதவீத தேர்ச்சியுடன் 34 வது இடத்தையும் பிடித்துள்ளது ‌