
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று நாளை தீபாவளி பண்டிகையிலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதைத்தொடர்ந்து நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று நவம்பர் 2-ம் தேதி கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.