தமிழகத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விளையாட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகமாக உள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கற்றுத் தருவதால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேச்சுப் பயிற்சி தர முடிவு செய்துள்ளது. அதற்காக பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக சென்னை கோவை, திருச்சி, மதுரை , சேலம், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.