தமிழகத்தில் உளுந்து கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 600 ரூபாய் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர்,சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உளுந்துக்கான விதைப்பு அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் முடிவடையும்.

அறுவடைக்காலமும் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் நிறைவடையும். நடைபாண்டில் உளுந்துகான குறைந்தபட்ச ஆதார விடையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி குவிண்டாலுக்கு 6,600ரூபாய் விலையாக நிர்ணயம் செய்த நிலையில் இந்த குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.