தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (28ம் தேதி) வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.