150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது  டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல்  நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது.  ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி எண் 02686” அறிவிப்புகள்தான் நம் நினைவுக்கு வரும்.  அதுவும் 150 ஆண்டுகால பழமையான சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ரயிலுக்கான அறிவிப்புகள் வெளியாகும்.

ஆனால் இனி செண்ட்ரல் நிலையம் ‘சைலண்ட் ஜோன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்பீக்கர் அறிவிப்புகளுக்கு பதிலாக போர்டுகளில் மட்டுமே ப்ளாட்பார்ம் எண்களை தெரிந்துகொள்ள முடியும் பல நூற்றாண்டுகளாக ரயில் பயணிகளை வழிநடத்தும் பொது அறிவிப்பு முறைக்கு விடைகொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது.