தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் ஜூன் 14ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்     வெயில் தாக்கத்தால் பள்ளித்திறப்பு 2 வாரம் தள்ளிவைப்பு, கனமழை காரணமாக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. குறிப்பாக 5ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும். மற்ற மாணவர்களுக்கு வழக்கம்போல் வகுப்புகள் நடக்கும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள்.