ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளில் பெண்களுக்கு உதவும் வகையில் “தோழி” திட்டத்தின் கீழ் ரூ.30 விலையில் சானிட்டரி நாப்கின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான இது கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளிலும் நாப்கின் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்த பெண்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள்.