மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற வருகிற 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று வருகிறது 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1ஆம் தேதியும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் நேற்று இரவு விடிய விடிய தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும்  20 இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.