டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படவுள்ளது.

2 ஆண்டுகளாக இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி கிடைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மகப்பேறு நிதியுதவி விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினர்