தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று தளபதி விஜய் கூறி வருகிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன விஜய் கூத்தாடி என்ற சொல்லை சுக்குநூறாக உடைத்தவர் எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டி இருந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை. அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எம்ஜிஆர் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து தமிழகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்தார். அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கலைஞருடன் சேர்ந்து கட்சிக்காக பணிபுரிந்தார்.
திமுகவுக்காக எம்ஜிஆர் செய்த பணிகள் அளப்பரியது. ஆனால் பிற்காலத்தில் கலைஞர் மற்றும் எம்ஜிஆர் இடையே கருத்து வேறுபாடுகள் என்பது ஏற்பட்டதால் பின்னர் அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கினார். அப்போது கூட கூத்தாடி என்று எம்ஜிஆரை விமர்சித்தார்கள். ஆனால் அவர் கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் இறக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் கம்யூனிச கட்சிகள் என்பது அதிமுக மற்றும் திமுகவுக்கு இணையாக இருந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.
இதன் காரணமாக திராவிட அரசியலையும் கம்யூனிச அரசியலையும் எம்ஜிஆர் கையாண்டார். இதேபோன்று விஜய் இளைஞர்களை கவர்வதற்காக திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் தன்னுடைய கொள்கைகளாக அறிவித்துள்ளார். தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக மக்களை கவர்ந்தார். ஆனால் இப்போது திரைப்படங்கள் மூலமாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றால் அது எடுபடாது. தேர்தல் மூலமாக தான் மக்களிடம் அரசியலைக் கொண்டு சேர்க்க முடியும். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அவரையும் கூத்தாடி என்று விமர்சிக்கிறார்கள்.
ஆனால் எம்ஜிஆர் போன்று கூத்தாடி என்ற சொல்லை கண்டிப்பாக விஜய் சுக்கு நூறாக உடைப்பேன் என்கிறார்.அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக விஜய் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைவார் என்று கூறப்படும் நிலையில் எம்ஜிஆர் அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் முதல்வராக மாறிய நிலையில் விஜயும் அதே நம்பிக்கையில் இருக்கிறார். இதன் காரணமாக அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் வருகை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு எம்ஜிஆர் ஆட்சி அமையுமா என்பதும் அப்போதுதான் தெரியும். இதை ஒரு வீடியோவாக பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,
