
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வழங்காத வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதியமின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் நுகர்வோருக்கு மின் இணைப்பை வழங்க என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி தவறினால் மின்வாரியம் சார்பில் ஒரு நாளைக்கு 100 முதல் 1000 வரை அபராதம் நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் படியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நுகர்வோர்கள் மின்சாதன இடமாற்றத்திற்கும் இந்த இணையதள பக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.