அதிமுகவா ? பாஜகவா ? என்கின்ற சவாலை முன்வைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, திமுகவா ? பாஜகவா ? என்ற சவால் வைக்கின்றேன். திமுக இங்கு ஆளுங்க. பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கு. போட்டி எங்க ரெண்டு பேருக்கும் தான். அதனால நான் ரெண்டு வருஷமா சொல்றேன். இன்னைக்காக சொல்ல. திமுகவா பாரதிய ஜனதா கட்சியா என சவால், 2024 தேர்தலில் அதை பார்ப்பீங்க. NDA கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை. அதிமுக கூட்டணியில்  இல்லை என்பதால் NDA தமிழ்நாட்டில் இல்லை என்று கிருஷ்ணசாமி சொன்னது குறித்து கருத்து கூறிய அண்ணாமலை,

1998ல் NDAவை ஆரம்பிச்சது யாரு ? 25 ஆண்டுகளா NDAவின் கன்வினரா யார் இருக்கா ? பிஜேபி தலைவர் இருக்கிறார். அதனால எல்லோருக்குமே தெரியும். NDAல யாரு இருக்காங்க. NDAவை உருவாக்குனது யாரு ? 2024 தமிழகத்தை பொறுத்தவரை திமுக VS பிஜேபி. காரணம் மத்தியில் நாங்கள் ஆளு கட்சியாக இருக்கின்றோம். பத்தாண்டுகள் ஆளுங்கட்சியா இருக்கோம். நாங்க செஞ்சிருக்க கூடிய வேலையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டியது எங்களுடைய கடமை.

மக்கள் கேள்வி கேட்பாங்க…  10 வருஷம் நீங்க ஆட்சியில் இருந்தீர்கள் என்ன பண்ணீங்கன்னு ? பதில் கொடுக்க வேண்டியது எங்களோட கடமை நாங்க பதில் கொடுக்கிறோம். அதே நேரத்தில் தேர்தல் வரும் போது 35 மாதங்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கு முடிந்திருக்கும். திமுகவின் ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்ய போறாங்க. திமுக தமிழ்நாட்டில் செய்திருக்க கூடிய சாதனையை மக்கள் முன்னாடி வைக்கட்டும். பாரதிய ஜனதா கட்சி பத்தாண்டுகளாக நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனையை மக்கள் முன்னாடி வைக்கிறோம். அதனால்தான் 2024 பார்லிமென்ட் எலக்சன் BJP VS திமுக என தெரிவித்தார்.