தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழக அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை ஆண்டுதோறும் ஜூலை ஒண்ணாம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் பணவீக்க விகிதம் அல்லது ஆறு சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பதால் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 4.70 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் கூடுதலாக 4.70 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதனால் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.