
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்துக் கழகத்தினர் தங்களின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 58 ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலன் சார்ந்த பல பாதிப்புகளும் ஏற்படுவதால் அவர்கள் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருதி ஓய்வு பெறும் வயதை குறைக்க வலியுறுத்தப்பட்டது.
தற்போது தமிழக அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் உள்ள 50 வயதுக்கு குறைவான ஓட்டுனர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் மற்றும் காது மருத்துவ பரிசோதனையும் 50 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.