தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் இந்த வருடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, கடந்த வருடம் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பல்வேறு காரணங்களால் 2028 கோடி செலவு செய்துள்ளோம். மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக 37,000 கோடி கேட்டுநிலையில் 276 கோடி மட்டுமே தந்தது. இதன் காரணமாக அரசுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பாக ஆயிரம் ரூபாய் தரப்படவில்லை என்று கூறினார். அதன்பிறகு மகளிர் உரிமைத்தொகை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறும் போது, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அடுத்த மாதம் மகளிர் உரிமைத்தொகை 1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறினார்.
