தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குள் அரசு போக்குவரத்து கழகங்களில் 1666 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் தற்போது புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பயனியர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது.

தீபாவளி பண்டிகையின் போது சென்னையிலிருந்து மட்டும் 5. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் பயணம் செய்தனர். பொங்கல் பண்டிகையின் போது பேருந்து பயணிகளின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் பொங்கல் பண்டிகைக்கு முன்பு 1666 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.