தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் 2 லட்சம் கறவை மாடு கடன் வழங்குவதற்கு பால்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக வங்கிகள் உதவியுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போது கையில் எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆவின் சார்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. வங்கியில் உற்பத்தியாளர்களுக்கு 50000 கடன் பெற்று தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.