கல்லூரி மாணவர்களான ஏ புருஷோத்குமார் (20) மற்றும் கே ரவிச்சந்திர ராஜா (20) ஆகியோர் கல்லூரி வேலை முடிந்த பிறகு இருக்கும் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவதற்காக பண தேவை ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்வதற்கு பதிலாக திருட்டு வேலையில் ஈடுபடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன்படி,  இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவரின் மொபைல் ஃபோனை பறித்து  பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல, 

கவனமாக இருந்த அந்த நபர் விரைவாக துரத்திச் சென்று இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து வழக்கு  பதிவு செய்த அதிகாரிகள், மேற்கொண்ட விசாரணையில்,  புருஷோத்குமார் பிபிஏ மூன்றாம் ஆண்டும், ரவிச்சந்திர ராஜா கோயம்பேட்டில் உள்ள கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டும் படித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.