2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதாவது பெண்கள் ஆவலோடு நீண்ட நாள் காத்திருந்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இன்று வரவுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? பயனாளிகள் வரைமுறை என்ன? போன்ற விவரங்கள் வெளியாகலாம். ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் வரும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.