தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இன்னும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ள நிலையில் பெண்கள் அனைவரும் இந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மார்ச் 20 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் பெண்கள் அமர்வதற்கு வித்திட்டது திராவிட இயக்கம் என சபாநாயகர் அப்பாவு பெருமிதம் கூறினார். இந்திய அளவில் பட்டப்படிப்பு படித்த பெண்கள் 34 சதவீதமாக இருந்த போதிலும் தமிழகத்தில் 52 சதவீதமாக உள்ளது. ஜாதி மற்றும் சமயம் கடந்து எல்லோரும் சமம் என்று சமூக நீதி காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெண்கள் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பட்ஜெட் கூட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.